×

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலாவில் தனிநபர் அர்ச்சனை கிடையாது

* தேர் நிலைக்கு வந்தபின் தரிசனத்துக்கும் அனுமதியில்லை
* கொரோனா தொற்று பரவலால் நிர்வாகம் நடவடிக்கை
* யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ெசன்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதியுலாவின் போது தனிநபர் அர்ச்சனை செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 18ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 21ம் தேதி அதிகார நந்தி காட்சி, மார்ச் 23ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா, மார்ச் 25ம் தேதி திருத்தேர் வீதி உலா,  மார்ச் 26ம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலா, மார்ச் 28ம் தேதி  சுவாமி திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்குனி திருவிழா அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. அதன்படி,

* பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கோயிலுக்கு வருவதை  தவிர்க்கவும்.

* திருவிழா முடியும் வரை அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்குவது தவிர்க்க வேண்டும்.

* தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதி உலாவின்போது பக்தர்கள் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக தனிநபர் அர்ச்சனை செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

* திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் தேரில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.

* திருக்கல்யாண உற்சவத்தை காண இரண்டு பெரிய திரை கோயிலுக்கு வெளியே பொருத்தப்பட்டு ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* அதிகார நந்தி காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சி, திருத்தேர் திருவிழா, அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீதிஉலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

Tags : Nayanmar Veediula ,Kabaliswarar Temple Panguni Festival , There is no individual rite of passage on the 63 Nayanmar Veediula at the Kabaliswarar Temple Panguni Festival
× RELATED கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா :...